யா / மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் 1973 ம் ஆண்டில் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த பழைய மாணவர்களினால் 10 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட துடுப்பாட்ட அணிகளின் பயிற்சிக்களம் திறப்பும் பயிற்சி தொடக்க நிகழ்வும் இன்று 16.01.2016 காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. பயிற்சிக்களத்தினை கல்லூரி அதிபர் திரு த. அம்பலவாணர் Uதிறந்து வைக்கப்பட்டது. இதற்கு முன்னர் வீரசிங்கம் 73 அணியினரால் விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. விளையாட்டு உபகரணங்களை மாணவர்களிடம் கையளித்தனர். தொடர்ந்து நடைபெற்ற பயிற்சிகள திறப்பு நிகழ்வினை தொடர்ந்து பயிற்சிகள் தொடங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் , வீரசிங்கம் 73 அணியினர் , பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் , மாவட்ட துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திரு றொஹான் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
